முகப்பு News India ஜம்மு காஷ்மீர், பீகார் மாநிலத்திற்கான புதிய ஆளுனர்கள் பதவியேற்பு

ஜம்மு காஷ்மீர், பீகார் மாநிலத்திற்கான புதிய ஆளுனர்கள் பதவியேற்பு

ஜம்மு காஷ்மீர், பீகார் மாநிலத்திற்கான புதிய ஆளுனர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதன்படி ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக சத்யபால் மாலிக்கும், பீகார் மாநில ஆளுனராக லால் ஜீ தாண்டெனும் பதவியேற்றுக்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 13-வது ஆளுனராக சத்யபால் மாலிக் நேற்று ஸ்ரீநகரில் உள்ள

ராஜ் பவனில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் முன்பு பதவியேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட 400 விருந்தினர்கள் கலந்து கொண்டதோடு, மத்திய ரிசர்வ் படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தற்போது ஆளுனராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் ஆவார். எனவே சத்யபால் மாலீக் காஷ்மீர் ஆளுனரானதை தொடர்ந்து, பீகார் மாநில ஆளுனராக அறிவிக்கப்பட்ட லால் ஜீ தாண்டென் பாட்னாவில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முகேஷ் ஆர் ஷா முன்னிலையில் நேற்று பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com