ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இந்தியாவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா, ஐந்து நாட்கள் பயணமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி, அந்நாட்டு ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் தமது விஜயத்தை ஆரம்பிக்கும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுக்கு முதலாவதாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பின்னர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.

அத்துடன், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது.

இதன்போது அவர் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]