ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 8பேர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் சூறாவளி வீசி வந்த நிலையில் இன்று 6.7 ரிக்டர் அளிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 40 பேர் காணாமல் போனதுடன், 120 பேர்வரை காயமடைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து எரிபொருள் மின்சக்தி ஆலைகள் அவசரமாக மூடப்பட்டதாக, ஜப்பான் ஹொக்கைடோ மின்சார நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே செய்தியாளர்களுக்கு கருத்த தெரிவிக்கையில்,குறித்த பகுதியில் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளுக்காக 25 ஆயிரம் பாதுகாப்பு ஊழியர்களை அங்கு பணியில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், அதில் சாத்தியமான உயிரிழப்புகளும், கட்டடச் சரிவுகளும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், மக்களின் உயிரை காப்பதற்கு தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில் v ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில் ஜப்பானில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]