ஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்

இலங்கை வாங்கிய

ஜப்பானிடம் இலங்கை வாங்கிய கடனே அதிகம்

சீனாவிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடனைவிட ஜப்பானிடம் இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகம் என, சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கடன்களில் 2.87 பில்லியன் டொலர் அல்லது 10 சதவீத கடன் மாத்திரமே சீனாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டாகும்போது, இலங்கை தனது வெளிநாட்டு கடன்களில் 12 சதவீதத்தை ஜப்பானிடம் பெற்றுக்கொண்டிருந்ததாக அந்த செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து சீனாவை குறை கூறும் மேற்கத்தேய நாடுகள், ஜப்பான் தொடர்பில் வாய் திறப்பது இல்லை என்றும் அந்த செய்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவிடம் உதவி கோருவதற்கு முன்னதாக, இந்தியாவிடம் உதவி கேட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]