ஜனாதிபதி 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்- ஹரின் பெர்ணான்டோ தெரிவிப்பு

அரசியலமைப்பின் 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி நேற்று அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 14 ஆம் நாடாளுமன்றம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இருக்குமானால் 14 ஆம் திகதி வரை காத்திருக்காமல் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிகாட்டினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]