ஜனாதிபதியின் யாழ் வருகையை எதிர்த்து இன்று மாபெரும் கண்டன பேரணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று(19) முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(19) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாடசாலையின் பழைய மாணவர்களால் அவரது வருகைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

அதாவது குறித்த பாடசாலை அதிபராக இருந்த. பிரான்சிஸ் (மைக்கல்) ஜோசப் அடிகளார். கல்லூரி அதிபர் பணிக்காலம் நிறைவுற்றதும் முற்றுமுழுதாக ஈழ மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவே தனது இறுதி மூச்சுவரை மக்களோடு நின்று உழைத்தவர்.

2009 மே 18 அன்று வெள்ளை கொடியுடன் சரணடையச் சென்று இன்றுவரை காணாமலாக்கப் பட்டவர்களில் அடிகளாரும் ஒருவர். அத்துடன் அதே மே 18 ஆம் திகதி கோரமாகக் கொல்லப்பட்ட குழந்தையின் உடல் கண்டு மாரடைப்பில் இறந்த சரத் ஜீவன் அடிகளார், இன்னும் முடிவு தெரியாத ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும்பலரைப் பற்றி இலங்கை பொறுப்புக்கூறாத நிலையில் ஜனாதிபதி இந்த கல்லூரிக்கு வருவதை எதிர்ப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பழைய மாணவர்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்தே குறித்த இந்த போராட்டத்தை இன்று காலை பாடசாலை முன்றலில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]