‘ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்துவிட்டது’

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி தற்போதே தேர்வு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை கூறியுள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிரணியின் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரசன்ன ரணதுங்கவின் குழு பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை தவிர, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் குழு, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]