கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி விசேட அழைப்பு

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இந்தக் கூட்டத்துக்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் சில காணாமல் போயுள்ளதாக அரசாங்கத்துக்குள்ளே இருந்தும், வெளியே இருந்தும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அறிக்கையின் பக்கங்கள் சிலவற்றைக் காணவில்லை என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார்.