ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரஷ்யாவின் இராணுவ வீரர்களின் தூபிக்கு மலர் அஞ்சலி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ரஷ்யாவின் பிரபல இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
மொஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் அலெக்சாண்டர் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நினைவு தூபியானது இரண்டாவது உலக யுத்த காலத்தில் உயிர் நீத்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.