ஜனாதிபதி மாளிகையிலும் மாடுகளை கட்டி பொங்கல் வைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் தொண்டமான்; கணபதி கனகராஜ்

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாடுகளை கட்டி கண்காட்சி நடத்தியது மட்டுமல்ல, ஜனாதிபதி மாளிகைக்குத் தோட்டத் தொழிலாளர்களின் மாடுகளை கொண்டுசென்று அங்கு ஜனாதிபதி தம்பதியரின் கரங்களில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டவைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் ஆறுமுகன் தொண்டமான் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

 கணபதி கனகராஜ்
கணபதி கனகராஜ்

டிக்கோயா ஹோர்லி தோட்டத்தில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மலையத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்றுள்ள சில புதிய அரசியல்வாதிகள் ஆறுமுகன் தொண்டமானை குறைகூறியே அரசியல் வாழ்க்கை நடத்திக்கொணடிருக்கிறார்கள். நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக இவர்களுக்கு கிடைத்த அதிஸ்டத்தை ஆறுமுகன் தொண்டமானை குறை கூறுவதற்கு பயன்படுத்தாமல் எதையாவது தான் சார்ந்த சமூகத்திற்கு செய்து காட்டுவதற்கு திரானியற்ற நிலையில் இருப்பதால் இவர்கள் அரசியல் இருப்பிற்காக இவ்வாறான விதன்டா வாதங்களில் காலத்தை கடத்துகின்றனர்.

மலையகத்தில் வீடமைப்பை ஆரம்பித்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை எவரும் மறந்துவிடமாட்டார்கள். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு 4000ம் வீடுகளை மலையகத்திற்கு கொண்டுவந்தது இலங்கை தொழிலாளர் காங்கிரசே. ஆனால் சிலர் மலையக வீடமைப்பிற்கு பிதாமகனாக தம்மை காட்ட முற்படுகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையிலும்
ஆறுமுகன் தொண்டமான்

மலையக மக்களுக்கு வீடமைப்பு அவசியமாகும். ஆனால் தற்போது கட்டப்படுகின்ற வீடுகள் தொடாச்சியாக ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்தால் வீடுகள் ஆற்றங்கரைக்கே வந்துவிடும் நிலையில் கட்டப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் மலையக மக்களின் வாழ்கைக்கு முகவரி கொடுத்து நமது சமூகத்தை மானமுள்ள சமூகமாக மாற்றியமைத்தது யார் என்ற வரலாற்றை எவராலும் மூடிமறைத்துவிட முடியாது. தோட்டங்களில் வீடமைத்ததும், வீதி அமைத்ததும், விளையாட்டு மைதானம் அமைத்ததும் பாடசாலை அமைத்ததும், மின்சாரம் கொடுத்ததும், தொழிற்பயிற்சி கல்லு{ரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் ல்அனைத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசே தனது வல்லமையை பயன்படுத்தி மலையகத்திற்கு கிடைக்கசெய்தது.
சுpலர் வெட்டி வீராப்பு காட்டிக்கொண்டு மலையக மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தவது மக்களுக்கு தெரியாத விடயமல்ல.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பின்னால் அணிதிரண்டுள்ள கூட்டம் கருங்கல்லைப்போன்றது. சிலருக்கு பின்னால் செல்லுகின்ற கூட்டம் ஆட்சியுடன் ஒட்டியிருப்பதால் இருக்கின்ற மண்ணாங்கட்டிகளும், ஓடுகாளிகளுமமே. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சேவைக்கு நிகராண சேவையை மலையக சமூகத்திற்கு எவறும் இதுவரை செய்யவில்லை எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]