ஜனாதிபதி, பிரதமர் இணைந்து ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டும்

“ஜனாதிபதி, பிரதமர் இணைந்து ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு” என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு அரசியல் நிலவரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவருக்கும் பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும் குறைகள் இருப்பின் அவற்றை சரிசெய்து முன்னோக்கிச் செல்வதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]