ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு தயாரா? – ரணில் சவால்

ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு தயாரா? – ரணில் சவால்

ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சிக்கு செல்வதற்கு தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தை ஜனாதிபதி முடக்கி சர்வாதிகாரியாக செயல்படுகிறார். பாராளுமன்றமே நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் அதியுச்ச நிறுவனமாகும். அவ் அதிகாரத்தை காப்பதற்காகவே போராடுகிறோம்.

இதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. பாராளுமன்றம் கூடி தீர்வு வரும் வரையில் நாம் இந்த அலரி மாளிகையை ஜனநாயகத்தை நிலைநிறுத்த செயற்படபோகும் நிலையமாகவே பயன்படுத்தப் போகின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]