ஜனாதிபதி நாளை விசேட உரை

இத்தாலியில் நடைபெறவுள்ள உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையாற்றவுள்ளார்.

பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று நண்பகல் இத்தாலிக்கு பயணமாகியிருந்தார்.

இதேவேளை, இந்த மாநாட்டை தொடர்ந்து திறந்த அரசாங்க தலைவர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஜோர்ஜியாவுக்கான விஜயத்திலும் ஈடுபடவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]