ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை

ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டவர்கள் நாடாளுமன்றத்துக்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளனர்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 2.15 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

சம்பிரதாயபூர்வமாக நடைபெறும் வைபவத்தின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த பின்னர், சபாநாயகரின் இருக்கையில் ஜனாதிபதி அமர்ந்து, அமர்வை ஆரம்பித்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.