ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச இன்னும் காலம் உள்ளது

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச இன்னும் காலம் உள்ளது கோட்டபாய தெரிவிப்பு.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பசில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம் வரும் போது, மகிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார்.

ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில் மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார். அதுபோல, இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது மக்கள், தமது ஜனாதிபதி வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்றும் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம்.

ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களை தானும், தனது சகோதரி பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மலேசியா சென்றுள்ள, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வில் இதனை கூறியுள்ளார்.

“நாங்கள் பல வருடங்களாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது. மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எது எப்படியோ அவர்களை முழுமையாக மன்னித்து விட்டோம்.

வெறுப்பை வெளிப்படுத்துவோரைக் கண்டுபிடிப்பது உண்மையில் மிகவும் கடினம். எந்த வகையான வன்முறைகளையும் நான் விரும்பவில்லை” என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]