ஜனாதிபதி தேர்தலில் பாரிய புரட்சிக்கு தயாராகும் பொதுபல சேனா

ஜனாதிபதி  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஞானசார தேரரை விடுதலை செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் திருப்புமுனையினையை ஏற்படுத்த போவதாகவும் அதற்கான பலம் தம்மிடம் உள்ளதாகவும் பொதுபல சேன தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக ஞானசார தேரரின் விடுதலையினை அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளதோடு  பொதுபல சேனா அமைப்பு கொழும்பில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பத்தரமுல்லே பஞ்சாஜோதி தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]com