ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பாதுகாப்பு மாநாடு

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் பாதுகாப்பு மாநாடு. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ‘தீவிரவாதத்திற்கு வன்முறைகளுக்கும் எதிரான பூகோள போக்கு’, மையக்கருவில் மாநாடு ஆரம்பமானது.ஜனாதிபதி

7வது முறையாக நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இம்மாதம் 28 மற்றும் 29ந் திகதிகளில் நடைபெறும் இம் மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களும், பாதுகாப்பு ஆலோசகர்களும், கலந்துகொள்ளவிருக்கின்றனர். இலங்கை இராணுவத்தினால் பூகோள பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான உரையாடலை ஏற்படுத்துவதற்காக 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு மாநாடு, உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறுகிறதுஜனாதிபதி

மாநாட்டில் வன்முறை மற்றும் தீவிரவாதம் பற்றிய பலவேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. தீவிரவாதத்தினால் அரசுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றை பற்றிய விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட உள்ளன.ஜனாதிபதி

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]