ஜனாதிபதி தலைமையில் அமரர் ‘பண்டாரநாயக்கா’வின் 119ஆவது ஜனன தின நிகழ்வு

பண்டாரநாயக்கா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகரான அமரர் எஸ். டபிள்யூ. ஆர் .டி ‘பண்டாரநாயக்கா’வின் 119ஆவது ஜனன தின நிகழ்வொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.

காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் சிலைக்கருகாமையில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர்களான நிமல்சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]