ஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவுமே இந்த நியமனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதோடு, குறித்த வர்த்தமானியில் பெயரிப்பட்டுள்ள அங்கத்தவர்கள் விபரங்கள் வருமாறு,

மாகாணசபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, சமூக நலன் மற்றும் ஆரம்ப தொழில்துறை அமைச்சின் செயலாளர் பந்துல விக்கிரமஆராச்சி, கல்வி அமைச்சின் செயலர் சுனில் ஹெற்றியாராச்சி,

நிலையான அபிவிருத்தி, வன உயிரினங்கள், மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கீத்சிறி, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திசநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்யரத்ன,

சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் வீரக்கோன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கொடிக்கார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் அசோக அலவத்த ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]