ஜனாதிபதி சனிக்கிழமை ‘மட்டக்களப்பு’க்கு விஜயம்

ஜனாதிபதி சனிக்கிழமை ‘மட்டக்களப்பு’க்கு விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமை 03.03.2018 அன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அன்றைய தினம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறும் விஷேட பூஜை வழிபாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உட்பட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூடவே கலந்து கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் மூன்று முறை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.