ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் யார் எனும் தகவலை வெளியிட்ட நாமல் குமார – வீடியோ உள்ளே

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பில், ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

நாலக சில்வா, மாகந்துரே மதுஸை பயன்படுத்தி ஜனாதிபதியைக் கொலை செய்ய முயற்சித்தார்.இதற்கு சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பணிப்புரை விடுத்தனர் என்பது தமக்கு தெரியும் என குறிப்பிட்ட நாமல் குமார, இந்த விடயத்தில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.

நாலக சில்வாவின் தனிப்பட்ட தேவைகளுக்காக இதனை மேற்கொள்ளவில்லை.அதனால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினாலும் பரவாயில்லை.

எனினும் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும் நாமல் குமார குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]