ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள்

ஜனாதிபதி ஆணைக்குழு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன செயற்படவுள்ளார்.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ. ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் டபிளியு.ஜே.கே. கீகனகே ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]