ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் காரியாலயம்

பிரதமர்

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் காரியாலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்த மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அதன் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளித்தார்.

பிரதமர் காரியாலயம் தெரிவித்த அறிக்கையில் “ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியால், சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் ஜனநாயக மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது. இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]