ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக ஆஜரான கோட்டாபய

பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின்லங்கா ஆகிய நிறுவனங்களில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்த விசாரணைக்காகவே இவர் ஆஜராகியுள்ளார்.

மேலும் களியாட்ட நிகழ்வுகளுக்கு அநாவசிய செலவுகளை மேற்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பல மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டு குறித்த விமான சேவை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, குறித்து விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின்லங்கா விமான சேவை ஆகிய நிறுவனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டமை, நுழைவுத் தேர்வில் சித்திபெறாத மற்றும் தகைமையற்றவர்களை பணிக்கமர்த்தியமை, ஒப்பந்தங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை, விமானப் பணியாளர்கள் சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு துணை நின்றமை உள்ளிட்ட மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]