அரசாங்கம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

அரசாங்கம் இன்று அல்லது நாளை  வீழ்ந்துவிடும் என சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தை  வீழ்த்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன தெரிவித்தார்.

நேற்று முற்பகல் வெல்லவாய பொது   விளையாட்டரங்கில் நடைபெற்ற ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு  குறிப்பிட்டார்.
நாட்டின் விவசாய சமூகத்தின் எதிர்காலத்தையும் நாட்டின் சுபீட்சமிக்கமிக்க அபிவிருத்திக்கு விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் மற்றும் சிறந்த அரசாங்க நிர்வாகத்தினூடாகவே முடியும். இதற்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது.

ஜனாதிபதி

ஒரு நாட்டின் காணி உரிமை மக்களுக்கு உரித்தாவதைப்போன்று விவசாய நிலங்களின் உரிமை விவசாய சமூகத்திற்குச் சொந்தமானதாகும். இதற்காக அரசாங்கத்தின் பொறுப்புக்களும் கடமைகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படும்.  பல தசாப்தங்களாக காணி உரிமை இல்லாமலிருந்த ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு இந்த உரிமையைப் பெற்றுக்கொடுக்க முடிந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு அவர்களது பல தலைமுறைக்கு கிடைக்காத உரிமை கிடைக்கப்பெற்றுள்ளது.

வறட்சியின் காரணமாக விவசாயத்திட்டங்கள் மற்றும் இலக்குகள் சவாலுக்குட்படுத்தப்பட்ட காரணத்தினால் பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை  நூற்றுக்கு 40 விகிதம் விழ்ச்சிடைந்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான பலர் மகிழ்ச்சியடைந்தபோதும் இயற்கை அவ்வளவு கருணையற்றதொன்றல்ல என்றும் பலர் எதிர்பார்ப்பதுபோன்று நாட்டுக்கு ஏற்படும் அனர்த்தம் இயற்கையின் ஆசீர்வாதத்துடன் இடம்பெறுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]