ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணித்தார் சபாநாயகர்!

இன்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைப்பெறவுள்ள சர்வக்கட்சி சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொள்ளமாட்டார் என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன்  சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந் நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அழைப்பினை சபாநாயகர் புறக்கணித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]