ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுபீட்சம் ,  சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம்  பற்றிய புதிய எதிர்பார்ப்புகளுடன்  2017 புத்தாண்டு மலர்ந்துள்ளது.  பேண்தகு யுகத்தினூடாக  வறுமையை இலங்கையிலிருந்து  அகற்றும் உணர்வுபூர்வமான   உறுதிப்பாட்டுடன் 22 மில்லியன் இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளனர்.  நிச்சயம் இந்த சவாலை நாம் வெற்றிகொள்வோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும்  உலக அரசியல்  , சமூக மற்றும் பொருளாதாரத்துறைகளில் பல்வேறு சிக்கல்கள்  எழுந்துவரும் பின்புலத்திலேயே புத்தாண்டில் காலடி பதித்துள்ளோம்.

வறுமையை அகற்ற வேண்டுமென்ற பெரும் பொறுப்பை முன்நிறுத்தி  எம்முன் இருக்கும் சவால்களை  வெற்றிகொண்டு வளமான  இலங்கையை நோக்கி செல்லும்  இந்த   பயணத்தை வெற்றிகொள்வோம் என்ற உறுதிப்பாட்டுடன்  பிறந்திருக்கும் புத்தாண்டில்  ஒரு மனதுடன் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி,  அனைவருக்கும் சுபீட்சமான  புத்தாண்டு வாழ்த்துக் பகிர்ந்துகொண்டுள்ளார்.