ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க கூட்டு எதிரணி தீர்மானம்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்க தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஜனாதிபதிக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்க தயார் என கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இன்று முற்பகல் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு மத்தியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]