ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மீண்டும் அழைப்பானை விடுத்த நீதிமன்றம்

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தற்போதைய பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி போலி ஆவணத்தை தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் பிரதான சாட்சியாளர்களான ஜனாதிபதியும் , பிரதமரும் நீதிமன்றத்திற்கு வருகை தராத நிலையில் அவர்கள் இருவரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளமையினால் நீதிமன்றத்திற்கு வருகை தர முடியாது போயுள்ளதாக அவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அந்த வழக்கை ஒக்டோபர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்த நீதிமன்றம் அன்றை தினத்தில் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி அவர்களுக்கு நான்காவது தடவையாக இன்றைய தினம் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. -(3)

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]