ஜனாதிபதிக்கும் ஐ.தே முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைப்பெறவுள்ளது.

நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணிநேர சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலை குறித்து தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், இன்று இரவு இந்த சந்திப்பு நடைப்பெறவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அத்துடன், இன்று பிரதமர் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான பிரதமராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]