‘ஜனாதிபதி’க்காக ஐவரடங்கிய குழு நியமனம்

ஜனாதிபதிக்காக ஐவரடங்கிய

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என்பது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர், இன்று நியமித்துள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர், 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினார். இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் ஆகும்.

எனினும், முன்னதாக இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஆறு வருடங்களாக காணப்பட்டது.

எனவே, மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா அல்லது பழைய முறையின் அடிப்படையிலா என்பது தொடர்பில் கேள்வியெழும்பியுள்ளது.

இதனை தெளிவுப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கோரியிருந்தார்.

இந்தநிலையிலேயே, குறித்த குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டேப் நியமித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]