ஜனவரி முதல் செப்டம்பர் வரை 5,614 முறைப்பாடுகள்

முறைப்பாடுகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2017 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் 5,614 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தடுப்புக் காவலில் இருக்கும்போது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீப்பிக்கா உடகம தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,174 ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]