ஜனவரியில் மாகாணசபை தேர்தல்

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான இணக்கப்பாட்டை கட்சி தலைவர்கள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளதாக கூறுப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சிகளின் தலைவர்களின் விசேடக் கூட்டம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்றிருந்தது.

இதன் போதே மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]