முகப்பு News Local News ஜனபலய என்ற பேரணியை எதிர்கொள்ள தயாராகிய அரசாங்கம்

ஜனபலய என்ற பேரணியை எதிர்கொள்ள தயாராகிய அரசாங்கம்

ஜனபலய என்ற பேரணியை எதிர்கொள்ள அரசாங்கம் சகல முன் ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, மஹிந்த ஆதரவு பொது எதிரணியினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும் அவ்வார்ப்பாட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட்டுள்ள போதும், அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், தலைநகர் கொழும்பின் பிரதான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, 5000இற்கும் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பேரணி கொழும்பை வந்தடையும் பிரதான இடங்களான கொழும்பு கோட்டை, லிப்டன் சுற்றுவட்டம், கொள்ளுபிட்டி சந்தி ஆகிய பகுதிகளில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிற்குள் நுழையும் மற்றும் வெளிச்செல்லும் பிரதான பாதைகளான காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி, ஹைலெவல் வீதி மற்றும் பத்தரமுல்ல வீதி என்பன விசேடமாக கண்காணிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறுகையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதோடு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே மேலதிக பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் தண்ணீர் தாங்கி, கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் கலகத்தடுப்பு பொலிஸார் ஆகியோரும் ஆயத்த நிலையில் உள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கும் இந்த பேரணியில் சுமார் 5 இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என பொது எதிரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com