ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திடீர் நீக்கம்

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் பிரபா கணேசன் கருத்து தெரிவிக்கையில், கட்சியின் கட்டுபாட்டை மீறி ஏனைய கட்சிகளின் முக்கிய நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்தமைக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கட்சியின் தனித்துவத்தை பேணிக்காப்பாற்ற தவறியமை மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளிள் ஈடுபடாமை காரணமாகவே அவர் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாவும் பிரபா கணேசன் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியின் செயற்குழு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், அதற்கமைய இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் செயற்குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]