ஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அங்குரார்ப்பணம்

ஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர்
ஜி . திருமாள் தலைமையில் நடைபெற்ற கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை ஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் தலைவரும் , சுகாதார அமைச்சரின் மகனுமான சத்துர சேனாரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்

ஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அங்குரார்ப்பண நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பாவனைக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஆலய வழிபாடுகளிலும் கலந்துகொண்டார் .

இந்நிகழ்வினை தொடர்ந்து ஜனநாயக ஒருங்கினைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு வைத்தியசாலை கிளை அங்குரார்ப்பணம் நிகழ்வு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

ஜனநாயக ஒருங்கினைந்த ஜனநாயக ஒருங்கினைந்த

இந்நிகழ்வில் சிறிலங்கா .சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் , சிறிலங்கா .சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் .தாதிய உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]