ஜனநாயகத்தைப் பாதுகாக்க கோரி கொழும்பில் எதிர்ப்பு பேரணி

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கோரி கொழும்பில் எதிர்ப்பு பேரணி

இன்றையதினம் பிற்பகல் முதல் இலங்கை தலைநகரான கொழும்பில், நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டமானது பிற்பகல் 12.30 மணிமுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தை பாதுகாக்க கோரி இலங்கையின் பல மாவட்டங்களை சேர்ந்த சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் ஒன்றினைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி மக்களின் தீர்ப்புக்கு எதிராக சட்டத்தை மீறி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுடன், பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததும் தவறு என தங்களின் எதிர்ப்பை இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]