சௌமியமூர்த்தி தொண்டமான்

சௌமியமூர்த்தி தொண்டமான் தேயிலைத் தடையை நீக்கிய ரஷ்ய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், நீக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மீளவும் இணைக்கக் கோரியும், இரு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தியும் பதுளை மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.

குறித்த போராட்டம் ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்றதுடன், இதில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]