சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா? இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்!

கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இவர் தனது முதல் கணவர் தொழிலதிபர் அஷ்வினை சென்ற வருடம் விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இவர் தொழிலதிபர் வணங்காமுடி என்பவருடைய மகன் ‘விசாகன்’ என்பவருடன் காதலில் இருந்ததாகவும். இந்த காதல் குறித்து அறிந்த ரஜினிகாந்த் தற்போது இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.  ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொழிலதிபர் என்று கூறப்படும்  விசாகன், வஞ்சகர் உலகம் படத்தில்  ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]