சௌந்தர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் அண்மையில் திருமணம் இடம்பெற்றது.

சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்வின் போது எடுக்கபட்ட பல்வேறு புகைப்படங்களும் காணொளிகளும் சமூகவலைத்தளத்தில் வெளியானது.

அத்துடன், நடிகர் தனுஷ் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார் என்ற சர்ச்சையும் கிளம்பியிறுந்தது. சர்சைகளுக்கு ஏற்றது போலவே நடிகர் தனுஷ் ஒரு சில புகைப்படங்களில் மட்டுமே போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த திருமணத்தில் புகைப்பட கலைஞசராக பணியாற்றிய நபர் ஒருவர் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் மிகுந்த சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், சங்கீத் நிகழ்ச்சியில் முத்து பாடலுக்கு ரஜினி ஆடியதும், அன்றைய நிகழ்ச்சி முடியும் போது நடிகர் தனுஷ் தனது ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடியதும் தான் என்று கூறியுள்ளார்.

அவருடன் இணைந்து அவரது குடும்பத்தினரும் ஆடி மகிழ்ந்தது அற்புதமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் ஒதுங்கி இருந்ததாக கூறி எழுந்த சர்ச்சைக்கு அவர் நடனமாடிய சம்பவம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]