சோறு போட்டவர்களை சுட்டவர்கள் எமது பிரதேசத்தில் பல விதவைகளை உருவாக்கியவர்கள் புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள்

சோறு போட்டவர்களை

சோறு போட்டவர்களை சுட்டவர்கள் எமது பிரதேசத்தில் பல விதவைகளை உருவாக்கியவர்கள் புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள்

சோறு போட்டவர்களை சுட்டவர்கள் எமது பிரதேசத்தில் பல விதவைகளை உருவாக்கியவர்கள் புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள் இவர்கள் புலிகள் அல்ல நரிகள் என ஜனநாயக போராளிகள் கட்சியில் மட்டு-அம்பாறை இணைப்பாளர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை (13) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசிய தலைவரினால் அமைக்கப்பட்ட அமைப்புகளில் முக்கியமானது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இன்றும் சோரம் போகாது விலைபோகாது அடிபணியாத தனித்துவமாக தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்ககூடியவர்களை ஒருங்கிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுடன் இணைந்து எங்களது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக ஜனநாயகப் போராளிகள் கட்சி கைகோர்த்துள்ளது. எமது மண்ணிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் எங்களுக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்.

புலிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி சிலர் அரசியல் செய்கிறார்கள் இவர்கள் புலிகள் அல்ல. தயவுசெய்து புலிகள் என்ற சொல்லை நீக்க வேண்டும். இவர்கள் புலிகள் அல்ல நரிகள். கடந்த காலங்களில் அவர்களின் அட்டகாசங்கள் ஆக்கிரமிப்புக்கள் எவ்வாறு இருந்தது என்பதை மக்கள் அனுபவ ரீதியாக அறிவார்கள். இவர்களது காலத்தில் எல்லைக் கிராமங்களில் பல காணிகள் பறிபோயுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் இருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுக்கின்ற கோரிக்கைகளை சர்வதேசமும் இலங்கை அரசும் நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை குறைக்க முயற்சியாககே சுயேட்சைக் குழுக்களாகவும் காட்டு விலங்குகளிலும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு அபிவிருத்தி செய்வது இவர்களின் நோக்கம் அல்ல தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகிறார்கள்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]