சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்திலுள்ள தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வேகமாக வந்த கார் ஒன்றை இவ்வாறு மோதி வெடிக்க செய்து நேற்று தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததையடுத்து 6 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற் கட்ட தகவலகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த தாக்குதலால் அருகில் இருந்த பாடசாலை கட்டிடம் ஒன்றும் இடிந்து தரைமட்டம் ஆனதோடு, ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சோமாலியாவில் பயங்கரவாதிகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]