“சோசலிச இலங்கைக்காக போராடுவோம்” எனும் கருப்பொருளில் ம.வி.முன்னணியின் மே தின ஊர்வலம்!!

“சோசலிச இலங்கைக்காக போராடுவோம்” எனும் கருப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம இன்று (01) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் இம்மே தின ஊர்வலம் இன்று (01) மாலை 3.00 மணியளவில் யாழ் றக்கா வீதியிலுள்ள கலைமகள் மைதானத்தில் ஆரம்பமாகியது.

வட கிழக்கு மக்களின் காணிப்பிரச்சனை அரசியல் கைதிகள் விடயம் மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தும் விதமாக இங்கு பதாதைகள் ஏந்தப்பட்டதுடன் கோசங்களும் எழுப்பப்பட்டன

இப்பேரணியானது யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்றடைந்து, அங்கிருந்து, கே.கே.எஸ் வீதி வழியாக யாழ். மாநகர மைதான முன்றலில் நிறைவடைந்ததுடன் அங்கு மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பொதுக்கூட்டமும் இடம்பெற்றது

யாழ். கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை விவசாய கடற்தொழிலாளர் சங்கம் , சமத்துவ உரிமைக்கான இயக்கங்கள் உள்ளுட்ட பல அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் லால்காந், உட்பட கட்சியின் வடமாகாண பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

யாழ் மாநகர மைதானத்தில் இடம்பெற்ற மேதின எழுச்;சி கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பலர் மேதின எழுச்சி உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]