சோகமயமானது மஹிந்த இல்லம் – ஆறுதல் சொன்ன ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை வீரகெட்டிய மெதமுலன வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமகால ஜனாதிபதி ஆறுதல் தெரிவித்தார்.

இதன்போது மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் உடனிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திரா டியுடர் ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். அவரின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற்று முடிந்தன.

சோகமயமானது சோகமயமானது சோகமயமானது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]