சொல்பேச்சு கேட்காத குரங்கு குட்டிக்கு தாய் புகட்டிய பாடம் -வீடியோ உள்ளே

மனிதர்களை போலவே குரங்கு ஒன்று தனது சொல்பேச்சு கேட்காத குட்டியை சமயோசிதமாக செயல்பட்டு தான் செய்ய கூடாது என்று சொன்னதை மீறிய குட்டியை அன்பாக கண்டித்த சம்பவம் அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

பெய்ஜிங் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் குட்டி குரங்கு மனிதர்கள் போல பிடிவாதம் பிடிப்பதும் அம்மா குரங்கு பாசத்துடன் அங்கே போகாதே என்று சொல்லியும் போன குட்டி குரங்கை அங்கிருந்து முரட்டுத்தனமாக அகற்றி அதன் பின் ஆழமாக அணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வனவிலங்கு காப்பகத்தில் இருந்த விளையாட்டு குதிரை மேல் ஏறி விளையாடிய குட்டி குரங்கை தடுக்க அந்த குதிரையின் மீது ஏறி பலமாக ஆட்டியது தாய் குரங்கு.

இதனால் கீழே விழுந்த குட்டி குரங்கை நம் அம்மாக்கள் விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்வதை போலவே தாய் குரங்கு தனது குட்டியை விழுந்த உடன் வாரி எடுத்து அணைத்து கொண்டது.

பார்க்கவே மிக அழகான காட்சியான இந்த வீடியோவை அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

குட்டி குரங்கின் பிடிவாதத்தையும் தாய்க்குரங்கின் செயலையும் அங்குள்ளோர் வியந்து நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]