முகப்பு Horoscope சொன்ன சொல்லை காப்பாற்றும் மிதுனராசிக்காரர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்

சொன்ன சொல்லை காப்பாற்றும் மிதுனராசிக்காரர்கள்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் ஆரோக் யமான செலவுகள் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலை களை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

கடகம்

கடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியா பாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். முன்கோபத்தால் பகை உண்டா கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்லசெய்தி உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச் சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோ கமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங் களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள் வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: பழைய பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com