சொந்த மனைவியை நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, தலையை மொட்டையடித்த கொடூர கணவன்- வீடியோ உள்ளே

பாகிஸ்தான் நாட்டில் கணவர் ஒருவர் தமது நண்பர்கள் முன்னிலையில் நடனமாட மறுத்த மனைவியை, நிர்வாணப்படுத்தி, அவரது தலையை மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரவைக்கும் இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அரசாங்கம் தலையிட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று மியான் பைசல் என்பவரது குடியிருப்பில் அவரது நண்பர்கள் சிலர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நண்பர்களின் கோரிக்கையை ஏற்று பைசல் தமது மனைவி அஸ்மாவிடம் நடனமாட கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு அஸ்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பைசல், தமது நண்பர்களுடன் இணைந்து மனைவி என்றும் பாராமல்,

அஸ்மாவின் உடைகளை உருவி நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் அவரது தலையை மொட்டையடித்துள்ளனர்.

மட்டுமின்றி இரும்பு கம்பியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை அஸ்மா கண்ணீருடன் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது ஆடைகளை அவர்கள் களைந்தனர். இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். மட்டுமின்றி நிர்வாணமாக கட்டித் தொங்க விடுவேன் எனவும் பைசல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது திருமணம் நடந்தது முதல் பைசல் மிகவும் பாசமுடன் இருந்து வந்ததாகவும்,

ஆனால் கடந்த 6 மாதங்களாகவே அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அஸ்மா தெரிவித்துள்ளார்.

அந்த கும்பலிடம் இருந்து தாம் தப்பியது குறித்தும், காவல்துறையை நாடி புகார் அளித்ததாகவும், ஆனால் லஞ்சம் கேட்டு அவர்கள் புகாரை வாங்க மறுத்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதனன்று வெளியான இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், இம்ரான் கான் அரசில் அமைச்சர் ஒருவர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து அஸ்மாவின் கணவர் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]