சொந்த மண்ணில் பெங்களூருக்கு அதிர்ச்சி 27 ஓட்டங்களால் புனே அபார வெற்றி

சொந்த மண்ணில் பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்த புனே அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைசிங் புனே சுப்பர் ஜெய்ன்ட் அணி நேற்று வீழ்த்தியது.

10ஆவது ஐ.பி.எல். தொடரின் 17ஆவது ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனே அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் திரிபதி 31 ஓட்டங்களையும், ரஹானே 30 ஓட்டங்களையும், ஸ்மித் 28 ஓட்டங்களையும், டோனி 27 ஓட்டங்களையும், மனோஜ் திவாரி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

162 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன் காரணமாக 27 ஓட்டங்களால் பெங்குளூர் அணி தோல்வியை தழுவியது.

பெங்களூர் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் கோஹ்லி , 28 ஓட்டங்களையும் கேதர் ஜாதவ் 18 ஓட்டங்களையும், வொட்சன் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பென்ஸ் ஸ்டோக் 3 விக்கெட்டுகளையும், தாகூர் 3 விக்கெட்டுகளையும், உனட்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக புனே அணியின் பென்ஸ் ஸ்டோக் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]