சொந்த மண்ணில் இலங்கைக்கு அடுத்த அடி: ஒருநாள் தொடரும் இந்தியாவசம்.

சொந்த மண்ணில் இலங்கைக்கு அடுத்த அடி: ஒருநாள் தொடரும் இந்தியாவசம்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் பகழிரவு ஆட்டமாக இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமன்னே 80 ஓட்டங்களை ஆகக்கூடுதலாக பெற்றார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில், பும்ரா 10 ஓவர்களில் 27 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 218 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா 124 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி 67 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.இலங்கை

இதனிடையே, போட்டி முடிவுறுவதற்கு சில நேரங்களுக்கு முன்னர் இலங்கை அணி ரசிகர்கள் மைதானத்துக்குள் போத்தல்களை எறிந்து குழைப்பத்தில் ஈடுபட்டனர்.

அதனால், போட்டி சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொணடுவரடப்பட்டு மீண்டும் இடம்பெற்றது.

இந்த வெற்றியினூடாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது.

முன்னதாக டெஸ்ட் தொடரையும் 3 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]