சொந்த மண்ணில் இலங்கைக்கு தொடர் சோகம் : இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 53 ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இன்றைய வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு டெஸ்ட் தொடரின் வெற்றியையும் தனதாக்கியுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகளை இழந்து 622 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

புஜாரா 133 ஓட்டங்களையும், ரஹானே 132 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிக்வெல்ல 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இலங்கை அணி 439 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த நிலையில், போலோ ஓன் முறையில் துடுப்பெடுத்தாட இந்திய இலங்கையை அழைத்தது.

இலங்கை அணி தனது இரண்டவாது இன்னிங்ஸில் 386 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனடிப்படையில் இந்திய அணி 53 ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்தது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 141 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜடோஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]